/

'டாப்-5'-ல் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் !

உலக மல்யுத்த தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் நான்காமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2016, 11:56 am

உலக மல்யுத்த தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் நான்காமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில், மகளிர் மல்யுத்த போட்டியில் 58 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் சார்பாக பங்கேற்ற சாக்ஷி மாலிக் வெங்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அந்த வெற்றியின் விளைவாக , இன்று வெளியிடப்பட்ட உலக மல்யுத்த தரவரிசை பட்டியலில் சாக்ஷி நான்காமிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு தர வரிசையில் சாக்ஷி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.